/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 08, 2025 02:43 AM
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் புள்ளாறு, தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ.கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராசன், மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். இதில், தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, ஏக்கருக்கு, 10,000 ரூபாய்- நிவாரணம் வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டத்தை கொண்டு வர பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும். உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் மாத வாடகை, 20,000 ரூபாய்- வழங்க வேண்டும். அரூர் பகுதியில்,
மரவள்ளி கிழங்கு தொழிற்சாலை துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.