/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடு இரு மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆய்வு
/
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடு இரு மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆய்வு
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடு இரு மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆய்வு
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடு இரு மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆய்வு
ADDED : பிப் 09, 2025 01:22 AM
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடு இரு மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆய்வு
பென்னாகரம்:தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் செயல்பட்டு வரும் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் திட்டத்தின் செயல்பாடுகளை, மாவட்ட கலெக்டர்கள் தர்மபுரி சதீஷ், கிருஷ்ணகிரி தினேஷ்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள் மற்றும், 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 249 பஞ்.,களில், 2,784 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகள் மற்றும், 10 ஊராட்சி ஒன்றியங்களில், 333 பஞ்.,கள், 3,974 ஊரகக் குடியிருப்புகள் என, மாநகராட்சி, 2 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 6,758 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க, ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்
படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கென நாளொன்றுக்கு காவிரியாற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு, 6.15 கி.மீ., தொலைவில் அமைக்கப்பட்டுள்ள, 160 மில்லியன் லிட்டர் கொள்ளளவுள்ள நவீன சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, 1.5௦ கி.மீ., தொலைவில் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்து நிலையத்திற்கு நீரேற்றம் செய்து, அங்கிருந்து, 3.40 கி.மீ., தொலைவில் மடம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள, 240 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரதான சமநிலை நீர்தேக்கத் தொட்டிக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது. பின் அங்கிருந்து, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவி, 1,585 கோடி ரூபாய் மாநில அரசின் குறைந்தபட்ச தேவை திட்டத்தில், 307 மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்குத்தொகை, 35.72 கோடி ரூபாய் என, 1,928 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் ஒகேனக்கல்லில் உள்ள நீரேற்று நிலையம், யானை பள்ளத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம், மடம் பகுதியிலுள்ள, 240 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரதான சமநிலை நீர்தேக்கத்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
இதில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் பாலசுப்பிரமணி, சேகர், நிர்வாக பொறியாளர் ரவிக்குமார், பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள் சுருளிநாதன், சகிலா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.