ADDED : செப் 18, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில், ஐந்தொழிலாளர்கள் சங்கம் சார்பில், விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது. ஒன்றிய தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஐந்தொழிலாளர்கள் சங்க மாநில நிறுவனர் முருகன் கல்லாவி சாலையில் கொடியேற்றினார். மாநில பொதுச்செயலாளர் சக்தி ஆச்சாரி பெயர் பலகையை திறந்து வைத்தார்.
முன்னதாக விஸ்வகர்மா உருவப்படத்திற்கு மலர் அலங்காரம் செய்து, விசேஷ பூஜை நடந்தது. அரூரிலும், விஸ்வகர்மா ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.