/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பங்குனி உத்திரத்தையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்
/
பங்குனி உத்திரத்தையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்
பங்குனி உத்திரத்தையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்
பங்குனி உத்திரத்தையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்
ADDED : மார் 24, 2024 01:31 AM
தர்மபுரி, தர்மபுரி அடுத்த, சந்தனுார் பாலமுருகன் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது.
தர்மபுரி, சந்தனுாரில் உள்ள பாலமுருகன் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று முன்தினம், கொடியேற்று விழா நடந்தது. நேற்று, திரளான பக்தர்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், மொடக்கோரி, சந்தனுார், குளியனுார், தா.குளியனுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் பால் குடம் எடுத்தனர். பின், ஊர்வலமாக கொண்டு வந்த பால் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பங்குனி உத்திரத்தையொட்டி இன்று சுவாமிக்கு திருக்கல்யாணமும், நாளை தேர் ஊர்வலமும் நடக்கிறது. இதே, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு முருகன் கோவில்களில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.