/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிவசுப்பிரமணி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.88 லட்சம்
/
சிவசுப்பிரமணி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.88 லட்சம்
சிவசுப்பிரமணி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.88 லட்சம்
சிவசுப்பிரமணி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.88 லட்சம்
ADDED : மார் 08, 2025 02:43 AM
சிவசுப்பிரமணி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.88 லட்சம்
தர்மபுரி:தர்மபுரி டவுன் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா முடிந்த பின், ஆண்டுதோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடப்பது வழக்கம். நேற்று கோவிலில் உள்ள, 11 உண்டியல்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மாதையன், கோவில் செயல் அலுவலர் முருகன், அறங்காவலர் குழு தலைவர் சேகரன் மற்றும் அறங்காவலர்கள் முன்னிலையில், திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடந்தது.
இதில், 4.88 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 350 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தன. கடந்தாண்டு, இந்த கோவில்
உண்டியல்களில், 2.21 லட்சம் ரூபாய் மற்றும், 4 கிராம் தங்கம், 165 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.