sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விமான படை பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம்

/

விமான படை பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம்

விமான படை பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம்

விமான படை பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம்


ADDED : ஜூலை 14, 2011 11:40 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: இந்திய விமான படையில் பணிபுரிய துடிப்பும், துணிவும், ஆர்வமுள்ள இளைஞர்கள், வரும் 18ம் தேதி சென்னை, தாம்பரத்தில் நடக்கும் ஆட்தேர்வு முகாமில் பங்கேற்கலாம்.

முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் மேஜர் (ஓய்வு) முத்துராம் வெளியிட்ட அறிக்கை: இந்திய விமான படையில் பணிபுரிய துடிப்பும், துணிவும்ம, ஆர்வமும் உள்ள திருமணமாகாத ஆண்கள், குரூப் ஓய் மற்றும் குரூப் எக்ஸ் ஆகிய பிரிவுகளில் சேர, வரும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை சென்னை, தாம்பரம் விமான படை தளத்தில், காலை 7 மணி முதல் ஆட் தேர்வு முகாம் நடக்கிறது. குரூப் ஒய் பிரிவுக்கு, 18ம் தேதி எழுத்து தேர்வும், உடற்திறன் தேர்வும், 19ம் தேதி எழுத்து தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முக தேர்வும், மருத்துவ பரிசோதனையும் நடக்கும். குரூப் எக்ஸ் பிரிவில், 20ம் தேதி எழுத்து தேர்வும், உடல் திறன் தேர்வும், 21ம் தேதி எழுத்து தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் தொழிற் பிரிவு தகுதி தேர்வும் நடக்கிறது. குரூப் ஒய் பிரிவுக்கு ப்ளஸ் 2 கலை, அறிவியல், வணிகவியல் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவு படித்து, 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். குரூப் எக்ஸ் பிரிவுக்கு ப்ளஸ் 2 கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களுடன் படித்து, 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரு பிரிவுக்கும் கடந்த 1990ம் ஆண்டு ஜூலை முதல் தேதி மற்றும் 1994ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், 2011ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதிக்கு பின் எடுக்கப்பட்ட ஏழு கலர் ஃபோட்டோ, 24க்கு 10 அளவுள்ள சுய முகவரி எழுதப்பட்ட அஞ்சல் வில்லை ஒட்பட்படாத இரு வெள்ளை உறைகள் மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வு நடப்பதால், இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us