/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விளக்க வாயிற்கூட்டம்
/
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விளக்க வாயிற்கூட்டம்
ADDED : அக் 04, 2024 01:12 AM
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விளக்க வாயிற்கூட்டம்
தர்மபுரி, அக். 4-
தர்மபுரி அடுத்த, பாரதிபுரத்திலுள்ள அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - டி.டி.எஸ்.எப்., - எம்.எல்.எப்., தொழிற் சங்கங்கள் சார்பாக, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விளக்க வாயிற்கூட்டம் நேற்று மாலை நடந்தது. சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் முரளி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., சிறப்பு தலைவர் ரகுபதி, ஏ.ஐ.டி.யு.சி., மண்டல செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
இதில், அரசு போக்குவரத்து கழகத்தில் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகைக்கு, தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை சரிசெய்து, பிற துறை ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். போக்குவரத்து துறையில் காலியாக உள்ள, 25,000 காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். சங்கங்களை முறைப்படுத்தி, ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க, வலியுறுத்தப்பட்டது. இதில், எம்.எல்.எப்., மண்டல தலைவர் முருகன், கோட்ட பொருளாளர் மணி உட்பட, பலர் பங்கேற்றனர்.

