/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பையாறு அணையிலிருந்துநீர் திறப்புக்கு விவசாயிகள் காத்திருப்பு
/
தொப்பையாறு அணையிலிருந்துநீர் திறப்புக்கு விவசாயிகள் காத்திருப்பு
தொப்பையாறு அணையிலிருந்துநீர் திறப்புக்கு விவசாயிகள் காத்திருப்பு
தொப்பையாறு அணையிலிருந்துநீர் திறப்புக்கு விவசாயிகள் காத்திருப்பு
ADDED : ஜன 30, 2025 01:31 AM
தொப்பையாறு அணையிலிருந்துநீர் திறப்புக்கு விவசாயிகள் காத்திருப்பு
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள தொப்பையாறு அணை, 50 அடி உயரம், 298.6 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஏற்காடு மலை மற்றும் பொம்மிடி, ஊத்துபள்ளம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, வேப்பாடி ஆற்றின் மூலம், தொப்பையாறு அணைக்கு தண்ணீர் வரத்து இருக்கும். கடந்தாண்டில் பெஞ்சல் புயலால் பெய்த கன மழையில், டிச., 2 அன்று ஒரே இரவில் அணை முழு கொள்ளளவை எட்டியது.
தொப்பையாறு அணையின் வலதுபுற கால்வாய், 17 கி.மீ., மற்றும் இடது புற கால்வாய், 24 கி.மீ., நீளம் கொண்டது. இதன் மூலம், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட பகுதிகளில் செக்காரப்பட்டி, தொப்பூர், கம்மம்பட்டி, வெள்ளார், தெத்திகிரிபட்டி, மல்லிகுந்தம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 5,330 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், பாசனத்திற்கு அணையிலிருந்து நீர் திறப்பு எப்போது என, விவசாயிகள்
எதிர்பார்த்துள்ளனர்.