/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கொப்பரையை அரசு கொள்முதல்விவசாயிகள் கோரிக்கை
/
கொப்பரையை அரசு கொள்முதல்விவசாயிகள் கோரிக்கை
ADDED : பிப் 07, 2025 01:18 AM
கொப்பரையை அரசு கொள்முதல்விவசாயிகள் கோரிக்கை
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய, 2 தாலுகாவில், அதிகளவில் தென்னை விவசாயிகள் உள்ளனர். இவர்களிடம் உள்ளூர் வியாபாரிகள் தேங்காய் கொப்பரையை, குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயித்த தரத்திற்கு, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில், ஒரு கிலோ அரவை கொப்பரை தேங்காய், 111 ரூபாய்க்கும், பந்து கொப்பரை தேங்காய், 120 -ரூபாய்க்கும் கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளது. -எனவே, விவசாயிகளின் நலன் கருதி, கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க, அரசு சார்பில், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

