/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பைக்கில் பறக்கும் சிறுவர்கள்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
பைக்கில் பறக்கும் சிறுவர்கள்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பைக்கில் பறக்கும் சிறுவர்கள்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பைக்கில் பறக்கும் சிறுவர்கள்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 14, 2025 01:37 AM
பைக்கில் பறக்கும் சிறுவர்கள்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அரூர்:அரூரில், சாலைகளில் அதிவேகமாக பறக்கும் சிறுவர்கள், கல்லுாரி மாணவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூரில், சமீப காலமாக, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சாலைகளில் லைசென்ஸ் இல்லாமல் பைக்குகளில் பறப்பது அதிகரித்துள்ளது. பஸ் ஸ்டாண்ட், கச்சேரி மேடு, திரு.வி.க., நகர், கடைவீதி, மஜீத்தெரு, போலீஸ் ஸ்டேஷன், நான்குரோடு உள்ளிட்ட இடங்களில் பைக்கில், 3 பேர் முதல், 5 பேர் வரை அமர்ந்து கொண்டு சாலைகளில் மின்னல் வேகத்தில் பஞ்சாய் பறக்கின்றனர். அத்துடன் பைக்கில் சாகச பயணம் செய்து பார்ப்பவர்களை பதற வைக்கின்றனர். இவர்கள், எதிரே வரும் வாகனத்தை பொருட்படுத்துவதில்லை. எந்த இடத்திலும் சாலை விதிகளை கடைப்பிடிப்பதும் இல்லை.
இதுபோன்ற சிறுவர், மாணவர்களால் சாலையில் விதிமுறைகளை கடைப்பிடித்து குறிப்பிட்ட வேகத்தில் செல்லும், இதர வாகன ஓட்டிகள் அச்சமடைந்து ஒதுங்கி ஓட வேண்டியுள்ளது. மேலும், விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
இதை போலீசாரும் கண்டும், காணாமல் இருந்து வருகின்றனர். எனவே, அரூரில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்லும் சிறுவர்கள், மாணவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.