/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'மஞ்சப்பை' பயன்படுத்தவிழிப்புணர்வு பேரணி
/
'மஞ்சப்பை' பயன்படுத்தவிழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 23, 2025 01:56 AM
பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டியில், வெங்கடசமுத்திரம் ஊராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் 'மஞ்சப்பை' பயன்படுத்த கோரி, விழிப்புணர்வு பேரணி, பி.டி.ஓ., ஜோதி கணேஷ் தலைமையில் நடந்தது.
பேரணியை, மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் விமல் ரவிக்குமார் தொடங்கி வைத்தார். பின் பொதுமக்கள், வணிக நிறுவனங்களில், 'மஞ்சப்பை' வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். மீண்டும், 'மஞ்சப்பை'யை மக்கள் பயன்படுத்த வலியுறுத்தினார்.
தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன், அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளி, தாலுகா அலுவலகம், தர்மபுரி மெயின் ரோடு, வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் தனபால், ஊராட்சி செயலர் கோவிந்தராஜ் மற்றும் துாய்மை பணியாளர்கள், மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.