/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 09, 2025 01:24 AM
ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நியாய விலை கடை பணியாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் கருப்பு சட்டை அணிந்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். வட்டத்தலைவர் குமார் வரவேற்றார். மாநில செயலாளர் கோவிந்தராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில், புது வினியோக திட்டத்திற்கு என, தனித்துறை உருவாக்க வேண்டும். சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு, 40 சதவீதம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். நியாய விலை கடைகளில் இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும். கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், ஊதிய மாற்ற குழு அமைத்து, 9-வது மாநில ஊதிய மாற்றக்குழுவில் சேர்க்கப்பட வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், என்பன உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தினர்.