/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வேற்றுமையை மறந்து ஒன்றிணைந்து தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுங்கள்'
/
வேற்றுமையை மறந்து ஒன்றிணைந்து தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுங்கள்'
வேற்றுமையை மறந்து ஒன்றிணைந்து தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுங்கள்'
வேற்றுமையை மறந்து ஒன்றிணைந்து தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுங்கள்'
ADDED : மே 20, 2025 02:40 AM
கிருஷ்ணகிரி, ''வேற்றுமைகளை மறந்து, தி.மு.க.,வினர் ஒன்றிணைந்து, வெற்றிக்கு பாடுபடுங்கள்,'' என, அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
தமிழகத்தில் வரும், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க.,விற்கு உட்பட்ட ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி மண்டல பொறுப்பாளர் அறிமுக ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
தி.மு.க.,வினர் தங்களுக்குள் ஏதேனும் வேற்றுமைகள் இருந்தால், அவற்றை மறந்து ஒற்றுமையுடன் கட்சி பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நாம் அதிக இடங்களில் வெற்றி பெற முடியும். புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் மூலமாக மாணவ, மாணவியரை உயர்கல்வி படிக்க வைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் வேலை வாய்ப்பு மையங்களில் படித்து பலரும், அரசு வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
இந்த புள்ளி விபரங்களை எடுத்து கூறி, 18 முதல், 25 வயதிற்கு உட்பட்ட இளைய தலைமுறையினரை, தி.மு.க., பக்கம் அழைத்து வர வேண்டும். வீடுகள்தோறும் சென்று, தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, வரும் தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 6 சட்டசபை தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டசபை தொகுதி, தி.மு.க., நிர்வாகிகளுடன் அமைச்சர் சக்கரபாணி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி கடலரசுமூர்த்தி, கோவிந்தசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுரணி செயலாளர் செங்குட்டுவன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சீனிவாசன், நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.