/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு துவக்கப்பள்ளியில் ரூ.33 லட்சத்தில் புதிய கட்டடம் கட்ட பூஜை
/
அரசு துவக்கப்பள்ளியில் ரூ.33 லட்சத்தில் புதிய கட்டடம் கட்ட பூஜை
அரசு துவக்கப்பள்ளியில் ரூ.33 லட்சத்தில் புதிய கட்டடம் கட்ட பூஜை
அரசு துவக்கப்பள்ளியில் ரூ.33 லட்சத்தில் புதிய கட்டடம் கட்ட பூஜை
ADDED : பிப் 01, 2025 12:42 AM
அரசு துவக்கப்பள்ளியில் ரூ.33 லட்சத்தில் புதிய கட்டடம் கட்ட பூஜை
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த மானியதஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட குரும்பட்டியான் கொட்டாய் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 38 குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டடம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இப்பள்ளி வளாகத்தில் குழந்தைகள் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 33 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. மானியதஹள்ளி முன்னாள் கூட்டுறவு வங்கி துணை தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். பா.ம.க., நிர்வாகிகள் பெரியசாமி, காமராஜ், பச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், புதிய வகுப்பறை கட்டட பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் காந்தி, ஆசிரியர் சாந்தகுமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பூங்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.