/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடத்துாரில் நாளை கிரீன் பார்க் பள்ளியின் 7ம் ஆண்டு விழா
/
கடத்துாரில் நாளை கிரீன் பார்க் பள்ளியின் 7ம் ஆண்டு விழா
கடத்துாரில் நாளை கிரீன் பார்க் பள்ளியின் 7ம் ஆண்டு விழா
கடத்துாரில் நாளை கிரீன் பார்க் பள்ளியின் 7ம் ஆண்டு விழா
ADDED : ஏப் 12, 2025 02:07 AM
கடத்துாரில் நாளை கிரீன் பார்க் பள்ளியின் 7ம் ஆண்டு விழா
பாப்பிரெட்டிப்பட்டி, ஏப். 12
கடத்துார், கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் எவரெஸ்ட் முனிரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தர்மபுரி மாவட்டம், கடத்துார் கிரீன் பார்க் மெட்ரிக் மற்றும் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி., சீனியர் செகண்டரி பள்ளியின், 7ம் ஆண்டு, ஆண்டு விழா நாளை, (13ம் தேதி) மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமை தாங்குகிறார். கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் எவரெஸ்ட் முனிரத்தினம் வரவேற்கிறார். எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பா.ம.க., செய்தி தொடர்பாளர், மூத்த வழக்கறிஞர், சமூக நீதி பேரவை தலைவர் பாலு, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜெயகாந்தம் சிறப்புரையாற்றுகின்றனர்.
பா.ம.க., தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலர் அரசாங்கம், தி.மு.க., தர்மபுரி ஒன்றிய செயலர் டாக்டர் பிரபு ராஜசேகர், சோனா பில்டர்ஸ் தலைவர், சேலம் இன்ஜினியர் அசோசியேஷன் செல்வகுமார், தர்மபுரி வி.சி.,மாவட்ட செயலர் சாக்கன் சர்மா, மருதம் நெல்லி கல்வி குடும்ப நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில், கடத்துார் பேரூராட்சி தலைவர் மணி, துணைத் தலைவர் வினோத், வணிகர் சங்கத் தலைவர் கண்ணப்பன், செயலாளர் முத்துசாமி, பா.ம.க., நிர்வாகி முத்துசாமி, முருகன், வி.சி.,நிர்வாகி சொன்ன கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
விழாவில் மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இவ்வாறு
கூறியுள்ளார்.