/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு கல்லுாரியில் மாநிலஅளவிலான கருத்தரங்கு
/
அரசு கல்லுாரியில் மாநிலஅளவிலான கருத்தரங்கு
ADDED : ஜன 25, 2025 01:49 AM
அரசு கல்லுாரியில் மாநிலஅளவிலான கருத்தரங்கு
பாப்பிரெட்டிப்பட்டி, : பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில், கணிதவியல் துறையில், கணித மேதை ராமானுஜம் மன்றம் சார்பில் 'நவீன உலகில் கணிதத்தின் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் முதல்வர் ரவி தலைமையில் நடந்தது.
கணிதவியல் துறை பேராசிரியர் ஐயப்பன் வரவேற்றார். 'வகை நுண் கணிதத்தின் பயன்பாடுகளின் முக்கியத்துவம்' குறித்து சென்னை பல்கலை பேராசிரியர் தண்டபாணியும், 'கணிதத்தில் இசை மற்றும் விளையாட்டுக்குண்டான தொடர்பு' என்னும் தலைப்பில் சென்னை சங்கீதா
தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் பத்மாவதியும் பேசினர்.இந்தக் கருத்தரங்கில் ஆய்வு கட்டுரைகள் சமர்பித்த மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார்.

