/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தைப்பூச தேர்திருவிழாவையொட்டிமுருகன் கோவிலில் கொடியேற்றம்
/
தைப்பூச தேர்திருவிழாவையொட்டிமுருகன் கோவிலில் கொடியேற்றம்
தைப்பூச தேர்திருவிழாவையொட்டிமுருகன் கோவிலில் கொடியேற்றம்
தைப்பூச தேர்திருவிழாவையொட்டிமுருகன் கோவிலில் கொடியேற்றம்
ADDED : பிப் 07, 2025 01:16 AM
தைப்பூச தேர்திருவிழாவையொட்டிமுருகன் கோவிலில் கொடியேற்றம்
தர்மபுரி : தர்மபுரி, குமாரசுவாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், தைப்பூச தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகளுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், இக்கோவில் திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மேளதாளம் முழங்க சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா நடந்தது.
இன்று வெள்ளிக்கிழமை புலி வாகன உற்சவமும், நாளை பூத வாகன உற்சவமும், நாளை மறுநாள் நாக வாகன உற்சவமும் நடக்கிறது. வரும், 10 காலை, 9:00 மணிக்கு எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பால்குட ஊர்வலமும், தொடர்ந்து இக்கோவில் மூலவருக்கு சிறப்பு பால் அபிஷேகமும் நடக்கிறது. அன்றிரவு, 10:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவமும், இரவு, 12:00 மணிக்கு பொன்மயில் வாகனத்தில், சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான வரும், 12ல் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.