/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாணியாற்றில்கொட்டப்படும் குப்பை தடுக்க கோரிக்கை
/
வாணியாற்றில்கொட்டப்படும் குப்பை தடுக்க கோரிக்கை
ADDED : பிப் 14, 2025 01:36 AM
வாணியாற்றில்கொட்டப்படும் குப்பை தடுக்க கோரிக்கை
அரூர்: அரூர் அடுத்த, பறையப்பட்டி புதுார் பஞ்.,க்கு உட்பட்டது, கோபிநாதம்பட்டி கூட்ரோடு. இங்கு, 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள, வாணியாற்றின் கரையில் வாணி மாரியம்மன் மற்றும் முனியப்பன் கோவில் உள்ளது. கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை கழிவுகள் மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் கோழி இறைச்சிக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு போன்றவை, வாணியாற்றின் கரையில் கொட்டப்படுகின்றன. அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையுள்ளது. இதனால், குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் பக்தர்கள் அவதியடைகின்றனர். எனவே, கோபிநாதம்பட்டி கூட்ரோடு வாணியாற்றில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

