தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ காவிரியாற்றில் மூழ்கியவாலிபரை தேடும் பணி

காவிரியாற்றில் மூழ்கியவாலிபரை தேடும் பணி

காவிரியாற்றில் மூழ்கியவாலிபரை தேடும் பணி


ADDED : பிப் 21, 2025 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 12:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காவிரியாற்றில் மூழ்கியவாலிபரை தேடும் பணி

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் தாத்தா, பேரன் தண்ணீரில் மூழ்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக தாத்தா உயிர் தப்பிய நிலையில், பேரனை தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அடுத்த தேவர்ஊத்துப்பள்ளத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர், சமீபத்தில் இறந்துபோன மூதாட்டிக்கு திதி கொடுக்க வேனில் ஒகேனக்கல் வந்துள்ளனர். அதில், எம்.எஸ்சி., படித்து வந்த தேவராஜ் மகன் விக்னேஷ், 21, நேற்று மதியம், 2:00 மணிக்கு தாத்தா ராஜந்திரன், 55, என்பவருடன் சேர்ந்து, ஒகேனக்கல் ஏத்துமடுவு பகுதியில், திதி கொடுத்து விட்டு, ஆற்றில் குளித்துள்ளனர். இருவரும் ஆற்றை கடந்து மறு கரைக்கு செல்ல முற்படும் போது, ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். அலர்களை உறவினர்கள் மீட்க முயற்சித்தனர். இதில் அதிஷ்டவசமாக ராஜேந்திரன் மீட்கப்பட்டார். விக்னேஷ் நீரில் அடித்து செல்லப்பட்டார்.

ஒகேனக்கல் போலீசார், சம்பவ இடம் சென்று தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பரிசல் ஒட்டிகளின் உதவியோடு ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us