ADDED : மார் 06, 2025 01:20 AM
வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு
தர்மபுரி:சைபர் கிரைம், வன்கொடுமை, பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்த, விழிப்புணர்வு முகாம்,
தர்மபுரி மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையில், தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று நடந்தது.
பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன் முன்னிலை வகித்தார். காரிமங்கலம் தாசில்தார் சுகுமார் பேசினார். தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பெரியசாமி பேசினர். இதில், பெற்றோர் கவன குறைவால், பள்ளி மாணவியருக்கு ஏற்படும் பாதிப்பு, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள், போக்சோ, வன்கொடுமை, சைபர் குற்றங்கள், சமூக நல்லிணக்கம், போக்குவரத்து, சாலை பாதுகாப்பு, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றை தடுப்பது குறித்து, மாணவர்களுக்கு எடுத்து கூறினர். மேலும், கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை, இளம் வயது திருமணம் குறித்து, தயக்கிமின்றி புகார் அளிக்க வேண்டுமென அறிவுரை வழங்கினர்.
இதில், பாலிடெக்னிக் கல்லுாரி துணை முதல்வர் இனியவன் தவமணி, எஸ்.ஐ.,க்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.