/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோடு ஜி.ஹெச்.,ல் பா.ஜ.,வினர் துாய்மை பணி
/
பாலக்கோடு ஜி.ஹெச்.,ல் பா.ஜ.,வினர் துாய்மை பணி
ADDED : ஏப் 09, 2025 01:25 AM
பாலக்கோடு ஜி.ஹெச்.,ல் பா.ஜ.,வினர் துாய்மை பணி
பாலக்கோடு:பாலக்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், பா.ஜ., கட்சி துவக்க தினத்தையொட்டி, பா.ஜ.,வினர் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில், பா.ஜ., துவக்க தினத்தையொட்டி, பா.ஜ., நகர மகளிரணி தலைவி வித்தியா தலைமையில் நேற்று, துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், தர்மபுரி மாவட்ட மகளிரணி தலைவி சங்கீதா, நிர்வாகிகள் வேலு, பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நலனை கருதி, மருத்துவமனை வளாகத்தை துாய்மை படுத்தினர். இதில், பா.ஜ., நிர்வாகிகள் பிரேமா, சிவசத்தி, கவிதா மற்றும் தொண்டர்கள் என, பலர் கலந்து கொண்டனர்.