/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம்பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
/
எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம்பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம்பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம்பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : ஏப் 11, 2025 01:40 AM
எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம்பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
பென்னாகரம்:பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியிலுள்ள எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் காவிரி தீர்த்தம் எடுத்து, மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில் எல்லம்மன் கோவில் அமைந்துள்ளது. கூத்தப்பாடி, பொச்சாரம்பட்டி, ஆனைக்கல்லனுார், பிள்ளப்பட்டி, சிக்கனம்பட்டி, கே.அக்ரஹாரம், ஜங்கமைனுார், ஈச்சம்பள்ளம் உள்ளிட்ட, 7 ஊர்களுக்கு சொந்தமான பங்காளிகள் கோவில். இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 1,000க்கும் மேற்பட்டோர் காவிரி தீர்த்தம் எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
நேற்று காலை, ஒகேனக்கல்லில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை, கூத்தப்பாடி திரவுபதி கோவிலில் இருந்து, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை, எல்லம்மன் கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்தனர். தொடர்ந்து, யாகசாலை பூஜை நடந்தது. ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.