/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மஹாவீர் ஜெயந்தி: மது விற்றவர்கள் கைது
/
மஹாவீர் ஜெயந்தி: மது விற்றவர்கள் கைது
ADDED : ஏப் 12, 2025 01:11 AM
மஹாவீர் ஜெயந்தி: மது விற்றவர்கள் கைது
தர்மபுரி, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., விஜயசங்கர் நேற்று முன்தினம் ரோந்து சென்றார். அப்போது, சோகத்துார் பிரிவு சாலை அருகே, மது விற்ற கிருஷ்ணன், 50, என்பவரை கைது செய்து அவரிடமிருந்த, 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். அதியமான்கோட்டை எஸ்.எஸ்.ஐ., அண்ணாதுரை, திருமலைகவுண்டன் கொட்டாயில் மது விற்ற சுந்தர்ராஜ், 43, என்பவரை கைது செய்து, 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். அதேபோல் என்.எஸ்., ரெட்டியூர் அருகே சாமிகவுண்டனுாரில் மது விற்ற ரவிச்சந்திரன், 58, என்பவரை கைது செய்து, 27 பாட்டில்களை பறிமுதல் செய்தார். மேலும் என்.எஸ்.ரெட்டியூர், சிவாடி, ஊட்டமலை, கானாபட்டி உள்பட பல்வேறு இடங்களில் மது விற்றவர்களை கைது செய்து, மொத்தமாக, 276 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

