sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் 17 முதல் மஞ்சள் ஏலம்

/

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் 17 முதல் மஞ்சள் ஏலம்

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் 17 முதல் மஞ்சள் ஏலம்

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் 17 முதல் மஞ்சள் ஏலம்


ADDED : பிப் 14, 2025 01:36 AM

Google News

ADDED : பிப் 14, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் 17 முதல் மஞ்சள் ஏலம்

தர்மபுரி:தர்மபுரி மதிகோன்பாளையம், ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் தெரிவித்துள்ளதாவது:

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில், தர்மபுரி விற்பனைக்குழு செயல்பட்டு வருகிறது. இதில், விவசாயிகள் விளைவித்த பொருட்கள் வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்பனை செய்து தரப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், 90 லட்சம் ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. இதில், 397 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

பிப்., 17 முதல் பிரதிவாரம் திங்கள்கிழமைதோறும் மதிக்கோன்பாளையத்தில் உள்ள தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், மஞ்சள் மறைமுக ஏலம் நடக்கவுள்ளது. இதில், தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலுள்ள விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மஞ்சளை கொண்டு வந்து, மறைமுக ஏலத்தில் பங்கேற்கலாம். மஞ்சள் தரத்திற்கு ஏற்ப விலை கிடைக்கும். தரகு, ஏலம் கமிஷன் இன்றி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கி மூலம், பணம் வரவு வைக்கப்படும். விவசாயிகள் மறைமுக ஏலத்திற்கு வரும்போது, தங்கள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். மறைமுக ஏலம், தர்மபுரி விற்பனை குழு செயலாளர் முன்னிலையில் காலை, 11:30 மணி முதல், 12:30 மணி வரை நடக்கும். இது குறித்து கூடுதல் விபரம் அறிய, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர், 95785 56523, மேற்பார்வையாளர், 93457 67733 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us