/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பூர் கட்டமேட்டில் 3 லாரிஅடுத்தடுத்து மோதி விபத்து
/
தொப்பூர் கட்டமேட்டில் 3 லாரிஅடுத்தடுத்து மோதி விபத்து
தொப்பூர் கட்டமேட்டில் 3 லாரிஅடுத்தடுத்து மோதி விபத்து
தொப்பூர் கட்டமேட்டில் 3 லாரிஅடுத்தடுத்து மோதி விபத்து
ADDED : பிப் 14, 2025 01:37 AM
தொப்பூர் கட்டமேட்டில் 3 லாரிஅடுத்தடுத்து மோதி விபத்து
தொப்பூர்:கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு, துவரம் பருப்பு லோடு ஏற்றி வந்த லாரியை, சேலம் மாவட்டத்தை சேர்ந்த நீலமோகன், 37, என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரி, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கட்டமேடு அருகே நேற்று மாலை, 3:45 மணிக்கு வந்தது. அப்போது, அதன் பின்னால் புனேவில் இருந்து இரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி மற்றும் கெமிக்கல் லோடு ஏற்றி வந்த டேங்கர் லாரி என இரு லாரிகளும், முன்னால் சென்ற துவரம் பருப்பு லாரி மீது மோதின. இதில், 3 லாரிகளும் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின.
இதில், துவரம் பருப்பு ஏற்றிவந்த லாரி டிரைவர் நீலமோகன், 37, இரும்பு பார லாரி டிரைவர் அங்கமுத்து, 43, ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். டேங்கர் லாரி டிரைவர் நியாஸ்முகமது, 53, இடிபாடுகளில் சிக்கி, அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து குழுவினர், விபத்தில் சிக்கிய, 3 டிரைவர்களையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால், தர்மபுரி - -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.