/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஜி.பி.எஸ்., கருவி பயன்பாடு பயிற்சி
/
ஜி.பி.எஸ்., கருவி பயன்பாடு பயிற்சி
ADDED : ஜூலை 14, 2011 11:43 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட வன அலுவலகத்தில், வன ஊழியர்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி பயன்பாடுத்தும் முறை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
வனப்பகுதியில் வன ஊழியர்கள் பயன்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் ஜி.பி.எஸ்., கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்ட வன ஊழியர்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி வழங்கப்பட்டுள்ளது. இக்கருவிகள் மூலம் வனப்பகுதியில் ஏற்படும் ஆக்கிரமிப்பு, அரிய வகை தாவரங்களை கண்டறிதல், வனப்பகுதியில் திசை தெரியாமல் தடுமாற்றம் உள்ளிட்டவைகளில் இருந்து வன ஊழியர்கள் மீண்டு வர முடியும். மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார், ஜி.பி.எஸ்., கருவி செயல் விளக்கத்தை செய்து காட்டினார். உதவி வனப்பாதுகாவலர் சவுந்தரராஜன், சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலக ஜி.பி.எஸ்., பிரிவு வன பாதுகாவலர் ராம்மோகன் வன ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தார்.

