/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பேட்டராயசுவாமி கோவில் தேர்திருவிழாதேன்கனிக்கோட்டையில் கோலாகலம்
/
பேட்டராயசுவாமி கோவில் தேர்திருவிழாதேன்கனிக்கோட்டையில் கோலாகலம்
பேட்டராயசுவாமி கோவில் தேர்திருவிழாதேன்கனிக்கோட்டையில் கோலாகலம்
பேட்டராயசுவாமி கோவில் தேர்திருவிழாதேன்கனிக்கோட்டையில் கோலாகலம்
ADDED : ஏப் 11, 2025 01:38 AM
பேட்டராயசுவாமி கோவில் தேர்திருவிழாதேன்கனிக்கோட்டையில் கோலாகலம்
கிருஷ்ணகிரி:தேன்கனிக்கோட்டையில் நடந்த, பேட்டராயசுவாமி கோவில் தேர்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சவுந்தர்யவல்லி சமேத பேட்டராயசுவாமி கோவிலின் தேரோட்டம், நேற்று துவங்கியது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன் ஆகியோர், வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
தேரோட்டத்தில், ஓசூர், கெலமங்கலம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமசந்திரன், ஓசூர் மாநகர மேயர் சத்யா, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமுவேல், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ், தாசில்தார் கங்கை, டவுன் பஞ்., செயல் அலுவலர் மஞ்சுநாத், பேட்டராயசுவாமி கோவில் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.