/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சமையல் உதவியாளர் பணிக்கு நேர்காணல்
/
சமையல் உதவியாளர் பணிக்கு நேர்காணல்
ADDED : மே 21, 2025 02:02 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தில், சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள, 22 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியுள்ள, 114 பேருக்கு நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்
பட்டது.
இதையடுத்து, நேற்று காலை, 8:00 மணி முதலே, நேர்காணலில் பங்கேற்க அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பெண்கள் தங்கள் உறவினர்களுடன் வரத்துவங்கினர். சிலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுமதி, (சத்துணவு), அரூர் பி.டி.ஓ., செல்வன், தாசில்தார் பெருமாள் ஆகியோர் நேர்காணலை நடத்தினர்.
* பென்னாகரம் வட்டாரத்தில், 14 பள்ளிகளுக்கு சமையல் உதவியாளர் பணிக்கு தகுதியான, 35 பெண்களுக்கு, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் பென்னாகரம் பி.டி.ஓ., லோகநாதன், பென்னாகரம் தாசில்தார் பிரசன்னமூர்த்தி, பென்னாகரம் சத்துணவு பிரிவு மேலாளர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.