/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேசிய வேளாண் சந்தை மூலம்ரூ.3.90 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
/
தேசிய வேளாண் சந்தை மூலம்ரூ.3.90 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
தேசிய வேளாண் சந்தை மூலம்ரூ.3.90 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
தேசிய வேளாண் சந்தை மூலம்ரூ.3.90 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
ADDED : மார் 19, 2025 01:37 AM
தேசிய வேளாண் சந்தை மூலம்ரூ.3.90 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
தர்மபுரி:வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில், தர்மபுரி விற்பனைக்குழு செயல்பட்டு வருகிறது.
இதில், விவசாயிகள் விளைவித்த பொருட்கள் வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பிரதி வார திங்கட்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. நேற்று மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், நடந்த மஞ்சள் ஏலத்தில், அதிகபட்சமாக, ஒரு குவிண்டால் பனங்காளி மஞ்சள், 23,509, விரலி, 13,169, உருண்டை, 11,189, ரூபாய் என ஏலம் போனது. இதில், 22 விவசாயிகள், 63 மூட்டைகளில் கொண்டு வந்திருந்த, 3,322 கிலோ மஞ்சள், 3.90 லட்சம் ரூபாய்க்கு ஏலம்போனதாக, வேளாண் விற்பனை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் தெரிவித்தார்.