/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மெத்தை தொழிற்சாலையில் தீரூ.20 லட்சம் பொருட்கள் நாசம்
/
மெத்தை தொழிற்சாலையில் தீரூ.20 லட்சம் பொருட்கள் நாசம்
மெத்தை தொழிற்சாலையில் தீரூ.20 லட்சம் பொருட்கள் நாசம்
மெத்தை தொழிற்சாலையில் தீரூ.20 லட்சம் பொருட்கள் நாசம்
ADDED : மார் 03, 2025 01:40 AM
ஓசூர்: தனியார் மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சப்படியில் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. நல்லகான கொத்தப்பள்ளியை சேர்ந்த ரவி என்பவர் தொழிற்சாலையை நடத்தி வந்தார். இதில், 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். நேற்று மாலை, இங்கு தீ பிடித்து மளமள வென பற்றி எரிந்தது. தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறிய நிலையில், ஓசூர்
தீயணைப்பு துறை வீரர்கள், 2 வாகனங்களில் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை முழுமையாக அணைத்தனர்.
ஆனாலும், மெத்தை தயாரிப்பு மூல பொருட்கள், இயந்திரங்கள் உட்பட, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
சூளகிரி பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால், ஓசூர், கிருஷ்ணகிரியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள், 30 கி.மீ., பயணித்து வரும் நிலை உள்ளது. எனவே, சூளகிரி பகுதியில் தீயணைப்பு அலுவலகம் வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.