/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பிளாஸ்டிக் பேப்பரில் உணவு3 கடைகளுக்கு அபராதம்
/
பிளாஸ்டிக் பேப்பரில் உணவு3 கடைகளுக்கு அபராதம்
ADDED : மார் 13, 2025 01:52 AM
பிளாஸ்டிக் பேப்பரில் உணவு3 கடைகளுக்கு அபராதம்
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், துரித உணவகங்கள் மற்றும் தாபாக்களில் இறைச்சி, உணவின் தரம் மற்றும் அரைத்த மசாலா, இட்லி தோசை மாவு உள்ளிட்டவை ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கன்டெய்னர், பெயின்ட், கிரீஸ், ரசாயனம் உபயோகப்படுத்திய பிறகு கிடைக்கும் பிளாஸ்டிக் பக்கெட் மற்றும் டிரேக்களில் உணவு சார்ந்த பொருட்கள் வைக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து, உணவு பரிமாற பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்திய, 3 ஓட்டல்களுக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இனி, வாழை இலை, மந்தார இலை, பாக்கு மட்டைகளில் மட்டுமே உணவு பரிமாறுதல் மற்றும் பார்சல் கட்ட வேண்டும் என எச்சரித்தனர்.