நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனியால் அவதி
அரூர், அக். 30-
அரூர் மற்றும் கோட்டப்பட்டி, சிட்லிங், தீர்த்தமலை, வீரப்பநாயக்கன்பட்டி, அச்சல்வாடி, எச்.ஈச்சம்பாடி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் மழை பெய்தது. தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையை விவசாயிகள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், கடந்த, 2 நாட்களாக நள்ளிரவு மற்றும் காலை நேரங்களில் பனிபொழிவும், குளிரும் நிலவுகிறது. பகலில் வெயில் அடிக்கிறது. இதனால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

