ADDED : ஏப் 11, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ., தண்ணீர் பந்தல்
அரூர்:அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், பா.ஜ., சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. நகர தலைவர் ரூபன் தலைமை வகித்தார். இதில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி பழங்கள் உள்ளிட்டவற்றை நிர்வாகிகள் வழங்கினர். இதில், முன்னாள் நகர தலைவர் ஜெயக்குமார், பிரவீன், நிர்வாகிகள் சாமிக்கண்ணு, பகலவன், முருகன், கிருத்திகா கலந்து கொண்டனர்.