நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் :தர்மபுரி மாவட்டத்தில், ஒரு சில இடங்களில், 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. நேற்று முன்தினம் இரவு, அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில், சில இடங்களில் கனமழை, சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. அரூர் நகரில், நான்கு ரோடு, திரு.வி.க., நகர், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
தொடர்ந்து, நேற்று காலை முதல், அரூர் சுற்று வட்டாரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம், 3:00 மணி முதல், பரவலாக அரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.