/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி மாவட்ட 251 பஞ்.,ல்நாளை கிராம சபை கூட்டம்
/
தர்மபுரி மாவட்ட 251 பஞ்.,ல்நாளை கிராம சபை கூட்டம்
ADDED : மார் 28, 2025 01:24 AM
தர்மபுரி மாவட்ட 251 பஞ்.,ல்நாளை கிராம சபை கூட்டம்
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்திலுள்ள கிராம பஞ்.,களில் தண்ணீர் தினத்தன்று நடக்கவிருந்த, கிராம சபை கூட்டம் நாளை நடத்தப்படுவது குறித்து, கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் கடிதத்தின் படி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 251 கிராம பஞ்.,களில், மார்ச், 22 தண்ணீர் தினத்தன்று நடக்கவிருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால், அதற்கு பதிலாக, நாளை (மார்ச் 29) சனிக்கிழமை காலை, 11:00 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இதில், கிராம சபை கூட்டத்தை நடத்த ஒவ்வொரு பஞ்.,க்கும் ஒரு பற்றாளர், ஒவ்வொரு ஒன்றியத்திலும் உதவி இயக்குனர் நிலையில், ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.