/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
9 மாத ஆண் குழந்தை சாவுபோலீஸ் விசாரணை
/
9 மாத ஆண் குழந்தை சாவுபோலீஸ் விசாரணை
ADDED : ஜன 25, 2025 01:49 AM
9 மாத ஆண் குழந்தை சாவுபோலீஸ் விசாரணை
அரூர்,: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நாகப்பட்டியை சேர்ந்தவர் சதிஷ், இவரது மனைவி மேகலா, 30, தம்பதியருக்கு ஹரிகர சுதன் என்ற, 9 மாத ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு மேகலா குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தொட்டிலில் துாங்க வைத்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து பார்த்தபோது குழந்தையின் கண்கள் மற்றும் வாய் பாதி திறந்த நிலையில் இருந்துள்ளது. உடனே மேகலா தனது தம்பி பாலகிருஷ்ணன் என்பவருடன் குழந்தையை எடுத்துக் கொண்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.