ADDED : செப் 06, 2024 01:23 AM
தர்மபுரி, செப். 6-
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.
இதில், சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், முறையாக, 100 சதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
வெளி மாநில மாவட்ட மற்றும் மாநில ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வழங்கவும், 10 சதவீதம் கூடுதலாக பொருட்களை வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், உரிய காலத்தில் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும்.
பாமாயில், துவரம் பருப்பு வழங்குவதில் தாமங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும். பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளில், நடமாட்ட பணியாளர் மற்றும் எடைத்தராசு வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் பொருட்கள் இறக்குவதற்கு, கட்டாய கூலி வசூல் செய்வதை தடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகை வலியுறுத்தி கோஷமிட்டனர். சங்க நிர்வாகிகள், தனசேகரன், சீனிவாசன், சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.