நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூறைக்காற்றுடன் மழை
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் இரவு, 7:30 முதல், 9:00 மணி வரை, சூறைக்காற்றுடன் பரவலாக விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. சூறைக்காற்றால், அரூரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் விளம்பர பலகைகள் துாக்கி வீசப்பட்டன. மேலும், சில இடங்களில் மின் கம்பிகள் மீது பேனர்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின், இரவு, 9:30 மணிக்கு மின் வினியோகம் செய்யப்பட்டது.

