நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டன ஆர்ப்பாட்டம்
அரூர்:மத்திய அரசின் வக்ப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி, இ.கம்யூ., சார்பில், தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் தமிழ்க்குமரன், அரூர் ஒன்றிய செயலாளர் சிற்றரசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.