ADDED : ஜூலை 25, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒகேனக்கல், ஆடி அமாவாசையையொட்டி ஒகேனக்கல் காவிரியாற்றில் முதலைப்பண்ணை எதிரே இருந்து காவிரியம்மன் கோவில் வரை ஏராளமனோர் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். பின் பூஜை செய்த பொருட்களை ஆற்றிலே விட்டனர்.
* கம்பைநல்லுார் அடுத்த இருமத்துார், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை உள்ளிட்ட தென்பெண்ணையாறு ஓடும் இடங்களில் மக்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.