ADDED : ஏப் 01, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீரைப்பட்டியில், வரும், ஏப்., 23ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், அரூர் தொகுதியில், 100 சதவீதம் வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், பொதுமக்களிடம், 100 சதவீதம் ஓட்டுப்போடுவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தாசில்தார் பெருமாள் வழங்கினார். வருவாய்த்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
