நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2 பெண்கள் மாயம்
தர்மபுரி:பென்னாகரம், மணியக்கார தெருவை  சேர்ந்தவர் டிரைவர் மாதப்பன், 45. இவருக்கு மகன், மகள் உள்ளனர். கடந்த, 15 வருடங்களுக்கு முன், மனைவி இறந்த நிலையில், 2வதாக செல்வி, 35, என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு குழந்தை இல்லை. கடந்த, 18 அன்று செல்வி மாயமானார். கணவர் புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, அரக்காசனஹள்ளி பள்ளிமுத்தானுாரரை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன், 34. இவர் மனைவி பாலாமணி, 30. இவர்களுக்கு, 2 மகள், மகன் உள்ளனர். கடந்த, 11 அன்று முதல் பாலாமணி மாயமானார். கணவர் புகார் படி, பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

