sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ரூ.2.56 கோடிக்கு நலத்திட்ட உதவி

/

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ரூ.2.56 கோடிக்கு நலத்திட்ட உதவி

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ரூ.2.56 கோடிக்கு நலத்திட்ட உதவி

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ரூ.2.56 கோடிக்கு நலத்திட்ட உதவி


ADDED : ஆக 11, 2024 03:20 AM

Google News

ADDED : ஆக 11, 2024 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த முகாமுக்கு, மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்-செல்வம் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்-பட்டு வருகிறது. அதன்படி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்-பட்டியில் நடந்த நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு, 2.56 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம், 307 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், வருவாய்த்-துறை, சமூக பாதுகாப்புத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தாட்கோ, தோட்டக்கலை, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் என, 307 பயனாளர்களுக்கு நலத்திட்ட உத-விகள் வழங்கப்பட்டன.

இதன் மொத்த மதிப்பு, 2 கோடியே, 56 லட்சத்து, 2,745 ரூபாய். மேலும், முதல்வர் அறிவித்த, அரூரை நகராட்சியாக தரம் உயர்த்தி, அதன் அரசு மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வச-திகள் மேம்படுத்தப்படும். அரசநத்தம், சிட்லிங் உள்ளிட்ட பகுதி-களில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி, சாமை ஆகிய-வற்றை மதிப்பு கூட்டு பொருளாக்க கிடங்கு அமைக்கப்படும். கம்பைநல்லுாரில், ஒரு கோடியே, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படும். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட பணிகள், 7,890 கோடி ரூபாயில் செயல்-படுத்தப்படும். இவ்வாறு பேசினார்.டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us