/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விதிமுறைகளை பின்பற்றாத5 கடைகளுக்கு அபராதம்
/
விதிமுறைகளை பின்பற்றாத5 கடைகளுக்கு அபராதம்
ADDED : மார் 27, 2025 01:27 AM
விதிமுறைகளை பின்பற்றாத5 கடைகளுக்கு அபராதம்
பாலக்கோடு:தர்மபுரி, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா தலைமையில், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் குழுவினர் புலிகரை, வெள்ளிச்சந்தை மற்றும் பாலக்கோடு தக்காளி சந்தை, தர்மபுரி சாலை, பாப்பாரப்பட்டி பிரிவு சாலை, புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மளிகை கடைகள், பேக்கரி, ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காலாவதியான குளிர்பானங்கள், தர்பூசணி பழங்களில் நிறம் மற்றும் இனிப்பிற்கு செயற்கை நிறமூட்டி செலுத்தப்பட்டுவது குறித்து பரிசோதித்தனர். இதில், செயற்கை நிறமூட்டிகள் மற்றும் நெகிழி பயன்படுத்திய, 5 கடைகளுக்கு தலா, 1,000 என, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.