/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ம.க.,வை வறுத்தெடுத்த அ.தி.மு.க.,வினர்
/
அரூர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ம.க.,வை வறுத்தெடுத்த அ.தி.மு.க.,வினர்
அரூர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ம.க.,வை வறுத்தெடுத்த அ.தி.மு.க.,வினர்
அரூர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ம.க.,வை வறுத்தெடுத்த அ.தி.மு.க.,வினர்
ADDED : மார் 24, 2024 01:34 AM
அரூர், தர்மபுரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் மருத்துவர் அசோகன் அறிமுக கூட்டம், அரூரில் நேற்று நடந்தது. சம்பத்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள், பா.ம.க.,வை கடுமையாக விமர்சித்தனர்.
இதில், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்
வெற்றிவேல் பேசுகையில்,''இன்றைக்கு, தமிழகத்தில் நாம் ஆட்சியை இழந்திருக்கிறோம் என்றால், தென்மாவட்டங்களில் எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெறாததினால் தான். அதற்கு காரணமானவர்கள், வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கிய, இ.பி.எஸ்.,க்கு நன்றி மறந்து, பா.ஜ.,வுடன், கூட்டணி வைத்துள்ள, பா.ம.க.,தான்,'' என்றார்.
முன்னாள் அமைச்சர்
முல்லைவேந்தன் பேசுகையில், ''தேர்தல் களத்தில் எதிரிகள் பண பலம், படைபலம் உள்ளவர்களாவும், கேடிகளாகவும், கிரிமினல் குற்றவாளிகளாகவும், ஒட்டுமொத்த சமூக விரோதிகளாகவும் உள்ளனர். நேற்று வரையிலும் நம்மோடு வருகிறேன் என கூறிவிட்டு, துரோகத்தின் அடையாள சின்னமாக இருப்பது, பா.ம.க.,தான். ஓட்டு கேட்க பங்காளிகள் வருவார்கள், அவர்களிடம் எங்கே, 1,000 ரூபாய், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து கேள்வி கேட்க வேண்டும்,'' என்றார்.
மாநில அமைப்பு செயலாளர் சிங்காரம் பேசுகையில், ''அன்பு மணியே தர்மபுரியில் தோற்றவர் தான். அரசாங்கம் போனால் என்ன, சவுமியா வந்தால் என்ன, அ.தி.மு.க.,வினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும்,'' என்றார்.
மாவட்ட செயலாளர் அன்பழ கன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
நம்மோடு கூட்டணியிலிருந்து, விலகியவர்கள் பற்றி, நாம் என்றைக்குமே கவலைப்படுவதில்லை. அது அவர்களுடைய பழக்கம். நம்மிடம் வருவார்கள், பதவியை பெறுவார்கள். அவர்கள் போய்விட்டார்கள். இன்றைக்கு எதிர்ப்பார்ப்போடு வேறு இடத்திற்கு சென்று விட்டார்கள். அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இ.பி.எஸ்., முதல்வராக வரவேண்டும் என்பதற்காக அரூரில், சம்பத்குமார், 9,683 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அன்புமணி, அரூர் தொகுதியில், 40,000 ஓட்டுக்கள் குறைவாக பெற்றார். அன்புமணி க்காக, தர்மபுரி மாவட்டத்தில், 2 நாட்களில், 15 இடங்களில், இ.பி.எஸ்., ஓட்டு சேகரித்தார்.
இவ்வாறு, அவர் பேசினர்.

