ADDED : ஆக 29, 2024 02:15 AM
அரூர், ஆக. 29-
அரூர் தாலுகா அலுவலகம் முன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்து தலைமை வகித்தார்.
போராட்டத்தை மாநில தலைவரும், கந்தர்வகோட்டை
எம்.எல்.ஏ.,வுமான சின்னதுரை துவக்கி வைத்தார். மத்தியம்பட்டி பஞ்., வேடியப்பன் கோவில் கிராமத்தில் குடியிருந்து வரும் இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். சின்ன பன்னிமடுவு, கைலாயபுரம் மற்றும் சந்திராபுரத்தில் இருளர் இன மக்களுக்கு, 1998ல் வழங்கப்பட்ட, 205 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை கிராம நத்த கணக்கில் மாற்றி பட்டா வழங்க வேண்டும். வேலனுார் பகுதியில் தரிசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும், 90 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக வீட்டுமனை மற்றும் நிலப்பட்டா கோரி மனு அளித்தவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மாநில துணைத்தலைவர் கணபதி, சி.பி.எம்., மாவட்ட
செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.