/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
ADDED : ஏப் 20, 2024 09:01 AM
தர்மபுரி: தின்னஹள்ளி ஓட்டுச்சாவடி மையத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தின்னஹள்ளி பஞ்., ஒன்றிய துவக்கப்பள்ளியில், இரண்டு ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளது. இதில், 1,600 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கலாம். நேற்று காலையில் இருந்து மாலை வரை ,பொதுமக்கள் ஆர்வமுடன் விறுவிறுப்பாக, லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு செய்தனர். இதில், 38 -க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை.
ஏமாற்றம் அடைந்த அவர்கள், அதிகாரிகளை கண்டித்தும், மீண்டும் எங்களுக்கு ஜனநாயக கடமையாற்ற நடவடிக்கை எடுக்ககோரி, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி முன், பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதியமான்கோட்டை போலீசார், வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், 1 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின், கோரிக்கை குறித்து விரைந்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, வரும் காலத்தில் வாக்களிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின், முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

