ADDED : அக் 03, 2026 04:52 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி
மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
என்.எஸ்.எஸ்., முகாம் கடந்த, 26 ல் தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது.
இதில்
மாணவர்கள் பல்வேறு இடங்களில் துாய்மைப் பணிகள், சாலை அமைத்தல்,
விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் பேரணி உள்ளிட்ட பணிகளை செய்தனர். நேற்று
நிறைவு விழா பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் இளமதி தலைமையில்
நடந்தது. பட்டதாரி ஆசிரியர்கள் கருணாநிதி, ரவிசங்கர் முன்னிலை
வகித்தனர். திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் மாரி,
மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி பேசினார். உதவி திட்ட
அலுவலர் மயிலம்மாள் நன்றி கூறினார்.
