ADDED : அக் 30, 2026 01:52 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட த.வா.க., சார்பில் நேற்று, கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தர்மபுரி சட்ட
சபை தொகுதி மாவட்டச் செயலாளர் பிரசாந்த் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர்கள் சரவணன் (பென்னாகரம்), ஜெயராமன் (பாலக்கோடு), மாது (பாப்பிரெட்டிப்பட்டி), மாவட்ட தலைவர் வசந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் சிட்பண்ட் நிறுவனங்களில் நடந்து வரும் முறைகேடுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். மாநில துணை அமைப்புச் செயலாளர் தவமணி, மாநில மகளிரணி நிர்வாகி மதுபாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தர்மபுரி நகரச் செயலாளர் ஜவஹர் நன்றி கூறினார்.
