/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போலி செயலியில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்; எஸ்.பி., எச்சரிக்கை
/
போலி செயலியில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்; எஸ்.பி., எச்சரிக்கை
போலி செயலியில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்; எஸ்.பி., எச்சரிக்கை
போலி செயலியில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்; எஸ்.பி., எச்சரிக்கை
ADDED : ஏப் 28, 2024 04:02 AM
தர்மபுரி: எச்.பி., என்ற போலியான செயலியில், முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மொபைல் பயன்படுத்து வோர் அதிகரித்துள்ளதால், நாளுக்கு நாள் இணைய வழி மோசடிகள் அதிகரித்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார், பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும், மோசடி நபர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, சமூக வலைதளங்களில் வரும் லிங்குகளில், போலியான இணையதளம் மற்றும் செயலிகளில் முதலீடு செய்து, அதிக லாபம் பெறலாம் என ஆசைப்பட்டு, பொதுமக்கள் பணத்தை இழப்பது,
சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
தற்போது தர்மபுரி மாவட்டத்தில், எச்.பி., என்ற போலியான முதலீட்டு செயலி ஒன்று, பொதுமக்களிடையே அதிகளவில் பகிரப்பட்டு, அதில் முதலீடு செய்து, பலர் பணத்தை இழந்துள்ளனர். இந்த செயலி மூலம், பணத்தை இழந்த சிலர், தர்மபுரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், சைபர் கிரைம் போலீசார், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன் வழிகாட்டுதலின் படி, மோசடி கும்பலை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த போலியான செயலியில் பொதுமக்கள் முதலீடு செய்து, பணத்தை இழக்க வேண்டாம். இதில், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக, 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொண்டு, தங்களது புகாரை தெரிவிக்கலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகரை பதிவு செய்யலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

